தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தேமுதிக சார்பில் போட்டியிட எல்.கே.சுதீஷ் விருப்ப மனு தாக்கல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார்.
சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது தொடர்பாக குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், தொகுதி பங்கீட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட துணைசெயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவர் தனது விருப்பமனு தாக்கல் செய்தார். முன்னதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட
விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story