நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன் - கமல்ஹாசன் பேச்சு
நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன் என திருவல்லிக்கேணியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திருவல்லிக்கேணியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
'நான் என் பள்ளியில் படித்ததை விட இந்த வீதிகளில் அதிகம் படித்துள்ளேன். நல்ல அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன். தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்று நம்பி வந்தவர்களை மதிக்கிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story