கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி - பாஜக அறிவிப்பு


கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி - பாஜக அறிவிப்பு
x
தினத்தந்தி 6 March 2021 12:18 PM IST (Updated: 6 March 2021 12:18 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை,

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என பாஜக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story