நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?


நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?
x
தினத்தந்தி 7 March 2021 10:31 AM IST (Updated: 7 March 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டசபை தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. போட்டியிடும் 20 சட்டசபை தொகுதிகள் மற்றும் அவற்றில் நிற்கும் வேட்பாளர்கள் பெயர்களை பா.ஜ.க.வின் தேசிய தலைமை இறுதி செய்து உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நவமியாக இருப்பதால், நாளை (திங்கட்கிழமை) அந்தப் பட்டியல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story