அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி - கே.எஸ்.அழகிரி பேட்டி


அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 7 March 2021 10:35 AM IST (Updated: 7 March 2021 10:35 AM IST)
t-max-icont-min-icon

வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. 

திமுகவுடனான தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கே.எஸ் அழகிரி கூறியதாவது:   திமுகவுடனான தொகுதிப் பங்கீடு மகிழ்ச்சியும், நிறைவையும் அளிக்கிறது. பாரதிய ஜனதாவிற்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே தான். மதச்சார்பின்மை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுவேன்.

அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பானது. எண்ணிக்கையை வைத்து இயக்கத்தை எடைப்போடக் கூடாது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்” என்றார். 

Next Story