பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா


பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் அமித்ஷா
x
தினத்தந்தி 7 March 2021 12:08 PM IST (Updated: 7 March 2021 12:16 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் 'வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்' என்ற பாஜக பிரசாரத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வந்தார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய அமித்ஷா, பின்னர் 10.10 மணிக்கு அங்கிருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

இதையடுத்து, 10.35 மணிக்கு சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்றும் அமித்ஷா  வாக்கு சேகரித்து வருகிறார். 


Next Story