சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் - மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல்


சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் - மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல்
x
தினத்தந்தி 7 March 2021 10:25 AM GMT (Updated: 7 March 2021 10:25 AM GMT)

சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். 

இதனைத்தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் எண்ணிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ளது. சமக மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும். அமமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தமிமுன் அன்சாரியுடன் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். 

Next Story