தமிழக சட்டமன்ற தேர்தல்செலவின பார்வையாளர்கள் இன்று வருகை


தமிழக சட்டமன்ற தேர்தல்செலவின பார்வையாளர்கள் இன்று வருகை
x
தினத்தந்தி 8 March 2021 5:26 AM GMT (Updated: 8 March 2021 5:26 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தல்செலவின பார்வையாளர்கள் இன்று சென்னை வருகின்றனர்.

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. முக்கிய கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவான நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையே கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் செலவின பார்வையாளர்கள் மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். டெல்லியில் இருந்து இருவரும் இன்று மாலை விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். வரும் 12ல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

Next Story