சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு
x
தினத்தந்தி 8 March 2021 12:56 PM IST (Updated: 8 March 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி-தொகுதி பங்கீடு நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீதமுள்ள 180 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தமிமூன் அன்சாரி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். ஆதரவு கடிதம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திமுகவிடம் வழங்கப்பட்டது.

கடந்த தேர்தலில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story