அதிமுக - த.மா.கா இடையே இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு
அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுதாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக - 23 தொகுதிகள், பாஜக - 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இதுவரை தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை. தேமுதிக-க்கு தொகுதி பங்கீடு வழங்குவதில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக - தமிழ்மாநில காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இன்று உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு அதிமுக - த.மா.கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நேற்று த.மா.கா. நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story