எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். ; நாங்கள் 3-வது அணி அல்ல, முதல் அணி - கமல்ஹாசன்
எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி 3-வது அணி அல்ல, முதலாவது அணி என கமல்ஹாசன் கூறினார்.
சென்னை
தமிழக சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி பட்டியல் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,கூட்டணியில் உள்ள ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆலோசனை நடத்தினார்கள். ம.நீ.ம, ச.ம.க., ஐ.ஜே.கே ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்பிறகு, கூட்டணி கட்சித் தலைவர்களோடு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில் எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி 3வது அணி அல்ல, முதலாவது அணி. அதிமுக, திமுக இரு கட்சிகளும் அகற்றப்படவேண்டியவை.மக்களுக்கு எதிரானவர்கள் எனக்கும் எதிரியே.
நாளை(புதன்கிழமை) காலை மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு வங்கியில் இருப்பு வைத்துக் கொண்டு காசோலையை எழுத வேண்டும். இல்லையென்றால் அது செல்லாததாகிவிடும் என கூறினார்.
கூட்டணியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வர் வேட்பாளரும் கமல்ஹாசன் தான். அனைவரும் ஒன்றுச் ஏர்ந்தால் தான் மாற்றம் ஏற்படும் என சரத்குமார் கூறினார். மேலும் எங்கள் கூட்டணி தமிழகத்திற்கு விடிவெள்ளியாக இருக்கும் என ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து கூறியுள்ளார்.
Related Tags :
Next Story