நாளை மறுநாள் தொடங்க இருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் 6-ம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து


நாளை மறுநாள் தொடங்க இருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் 6-ம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து
x
தினத்தந்தி 10 March 2021 5:57 AM GMT (Updated: 2021-03-10T11:27:48+05:30)

நாளை மறுநாள் தொடங்க இருந்த திமுக தலைவர் ஸ்டாலினின் 6-ம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஐந்து கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். இதையடுத்து 6-ம் கட்ட பிரசாரத்தை, மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story