அ.தி.மு.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை


அ.தி.மு.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 10 March 2021 8:42 AM GMT (Updated: 10 March 2021 8:42 AM GMT)

அதிமுக - தமிழ்மாநில காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெறுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்றும் சில நாட்களே உள்ள நிலையில் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு 23 தொகுதிகளும், பாஜக-வுக்கு 20 தொகுதிகளும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக - தமிழ்மாநில காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Next Story