அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு


அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2021 10:47 AM GMT (Updated: 10 March 2021 10:47 AM GMT)

அமமுக-வுடன் விடுதலை தமிழ்ப்புலிகள் மற்றும் மக்களரசு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

அந்த வகையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அமமுக தலைமையிலான கூட்டணியில் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கத்திற்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் மற்றும் மக்களரசு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது.

அந்த வகையில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் தொகுதியும், மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Next Story