சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கிடூ - இந்திய தேர்தல் ஆணையம்


சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கிடூ - இந்திய தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 10 March 2021 11:39 AM GMT (Updated: 10 March 2021 11:39 AM GMT)

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது.

புதுடெல்லி,

தமிழகம், புதுவையில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.  

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

அதேபோல், தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிகப்படாத கட்சிகளுக்கு தேர்தலில் சின்னம் ஒதுக்குதல் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக-வுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது.  

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிக தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், அமமுக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் தேமுதிக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story