தேமுதிகவிற்கு இனிமேல் அழைப்பு விடுக்கமாட்டோம் - மக்கள் நீதி மய்யம்


தேமுதிகவிற்கு இனிமேல் அழைப்பு விடுக்கமாட்டோம் - மக்கள் நீதி மய்யம்
x
தினத்தந்தி 10 March 2021 5:32 PM IST (Updated: 10 March 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி தொடர்பான அழைப்பிற்கு தேமுதிக பதிலளிக்காத நிலையில் இனி அழைப்பு விடுக்கமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,

நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் 
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தேமுதிக-வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று அழைப்பு விடுத்தது. ஆனால், மக்கள் நீதி மய்யம் விடுத்த அழைப்பிற்கு தேமுதிக தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கூட்டணி தொடர்பான அழைப்பிற்கு தேமுதிக பதிலளிக்காத நிலையில் இனி அழைப்பு விடுக்கமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. 

மநீம கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளன. எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயக கட்சி) உடன் கூட்டணி மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story