தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை


தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
x
தினத்தந்தி 11 March 2021 4:08 PM IST (Updated: 11 March 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

தேமுதிக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கட்சிகளுடனே இந்த சட்டமன்ற தேர்தலிலும் பயணிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தே.மு.தி.க. நேற்று முன்தினம் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை திடீரென்று வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து தே.மு.தி.க. இந்த தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகிறார்கள்? புதிய கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுமா? அல்லது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக - தேமுதிக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசியதாகவும், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சந்தித்து கூட்டணி தொடர்பாக தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் உறுதி செய்தார்.

தேமுதிக - அமமுக இடையே நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.  முதலமைச்சர் வேட்பாளர், தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story