இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை
சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி அந்த கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வாணியம்பாடி, விழுப்புரம், மணப்பாறை, பூம்புகார், கடையநல்லூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி கடையநல்லூர் தொகுதியில் முகமது அபூபக்கர், வாணியம்பாடி முகமது நயீம், சிதம்பரம் தொகுதியில் அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story