"அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும்" - டிடிவி தினகரன்


அமமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 12 March 2021 12:45 PM IST (Updated: 12 March 2021 12:45 PM IST)
t-max-icont-min-icon

அமமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அமமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இன்று சுமுக முடிவை எட்டும்’ என்றார்.

அமமுக சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

Next Story