வீட்டிற்கு ஒருவருக்கு வேலை: அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்
வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் சட்டபேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அதில்,
* வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு வீடு தேடி இடுப்பொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்.
* மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும்முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை.
* விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம்.
* அரசு வேலைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்.
* காவல்துறையில் பெண் காவலர்களுக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.
உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அமமுக கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story