அண்ணா திராவிடர் கழக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் திவாகரன் வெளியிட்டார்


அண்ணா திராவிடர் கழக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் திவாகரன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 13 March 2021 2:55 AM IST (Updated: 13 March 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் மன்னார்குடியில் அவரது கட்சி சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

திருவாரூர், 

சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் மன்னார்குடியில் அவரது கட்சி சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அண்ணா திராவிடர் கழகத்தின் 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-

தென்காசி-முருகன் என்கிற கே.ஆர் உதயகுமார், குறிஞ்சிப்பாடி-சுரேஷ் என்கிற ஆர்.முத்துகிருஷ்ணன், கன்னியாகுமரி-டாக்டர் கே.சி.அழகேசன், நாகர்கோவில்- எஸ்.கே.சக்திவேல் பிரபு, மதுரை வடக்கு - எஸ்.வசந்தகுமார், போடி -தேனி டி.கர்ணன், ஆத்தூர் -கே.கே. மாதேஸ்வரி முருகேசன், திருப்பூர் வடக்கு-பி. அழகுசுந்தரம், செஞ்சி -என்.ஏ.ஏழுமலை.

பட்டுக்கோட்டை-டி. மெய்க்கப்பன், திருமயம்-எஸ்.புரட்சிபாலன், பல்லடம்-டைகர் கே.தினகரன், நன்னிலம்-சின்னையா (என்கிற) எம்.எஸ்.முருகவேல், திண்டிவனம்-கே.இளவரசன், விராலிமலை-ஏ.விஜய், திருச்சி மேற்கு-பரீதா பேகம், ஸ்ரீரங்கம்-இளங்கோ பிரபாகரன்.

Next Story