சில விஷயங்கள் திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்வோம் - திமுக எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு
சில விஷயங்கள் திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்வோம் என திமுக எம்.பி. யான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை,
திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம், இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்டவை திமுக-வின்
முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அக்கட்சியின் எம்.பி.யான டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ஆளும் கட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் (அதிமுக அரசு) செய்யத்தவறிய மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பற்று தவிக்கும் இளைஞர்கள் நலன் குறித்து எங்கள் (திமுக) தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அனைத்து மதத்தை சார்ந்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
மதுவிலக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளங்கோவன் ’சில விஷயங்கள் திமுக ஆட்சி அமைந்த பிறகு செய்வோம்’ என்றார்.
Related Tags :
Next Story