எடப்பாடி பழனிசாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்
எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
சேலம்,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
இதையடுத்து இன்று இரவே அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் புறப்படுகிறார். சேலம் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணி அளவில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதைப்போலவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினமே போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
Related Tags :
Next Story