கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு


கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டி - காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2021 10:33 AM IST (Updated: 14 March 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

சென்னை,

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. அதில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய் வசந்த் மறைந்த வசந்தகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story