சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியீடு


சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியீடு
x
தினத்தந்தி 14 March 2021 5:38 AM GMT (Updated: 14 March 2021 5:38 AM GMT)

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 
 
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

அந்த வகையில், திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை  வரும் 17-ம் தேதி வெளியிட உள்ளது. சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.மேலும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து வரும் 18 ஆம் தேதி வைகோ பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்கிடையில், அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story