பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ சரவணன்
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியடைந்த திமுக எம்.எல்.ஏ. சரவணன் இன்று பாஜக-வில் இணைந்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் சமீபத்தில் வெளியிட்டார். 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தற்போது திமுக எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணனும் ஒருவர்.
2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றர் சரவணன். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ. சரவணன் இன்று பாஜகவில் இணைந்தார். சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் சரவணன் பாஜகவில் இணைந்தார்.
Related Tags :
Next Story