அதிமுக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!


அதிமுக இன்று  வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
x
தினத்தந்தி 14 March 2021 2:14 PM GMT (Updated: 14 March 2021 2:14 PM GMT)

அதிமுக இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சென்னை,

அதிமுக இன்று  வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* குடும்ப தலைவிகளுக்கு குல விளக்கு திட்டத்தின்கீழ் ரூ.1500, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
விளம்பரம்
 
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்

* பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும்

* பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்.

* அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயர்த்தப்படும்

* மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்றப்படும்

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்

* மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்  தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை

* நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை

* வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தெகை இரட்டிப்பாக்கப்படும்

* அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்

* காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

* கரிசல், களிமண் எடுக்க தடையில்லா சான்று அளிக்கப்படும்

* பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

* பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்

* 25000 ரூபாய் மானியத்தில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்

* பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.

* மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story