தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி


தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி
x
தினத்தந்தி 14 March 2021 4:55 PM GMT (Updated: 14 March 2021 4:55 PM GMT)

தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டி.டி.வி.தினகரன் தலைமையில்அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அமமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 60 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக தலைமை இன்று வெளியிட்டது. அதில், விஜயகாந்த் போட்டியிடவில்லை எனவும், விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு;-

1.கும்மிடிப்பூண்டி - கே.எம்.டில்லி
2.திருத்தணி - டி.கிருஷ்ணமூர்த்தி
3.ஆவடி - நா.மு.சங்கர்
4.வில்லிவாக்கம் - சுபமங்களம் டில்லிபாபு
5.திரு.வி.க நகர் (தனி) - எ.பி.சேகர்
6.எழும்பூர் (தனி) - டி.பிரபு
7.விருகம்பாக்கம் - பா.பார்த்தசாரதி
8.சோழிங்கநல்லூர் - ஆர்.பி.முருகன்
9.பல்லாவரம் - டி.முருகேசன்
10.செய்யூர் (தனி) - ஏ.சிவா
11.மதுராந்தகம் (தனி) - என்.மூர்த்தி
12.கே.வி.குப்பம் (தனி) - பி.தனசீலன்
13.ஊத்தங்கரை (தனி) - ஆர்.பாக்யராஜ்
14.வேப்பனஹள்ளி - எஸ்.எம்.முருகேசன்
15.பாலக்கோடு - பி.விஜயசங்கர்
16.பென்னாகரம் - ஆர்.உதயகுமார்
17.செங்கம் (தனி) - எஸ்.அன்பு
18.கலசப்பாக்கம் - எம்.நேரு
19.ஆரணி - ஜி.பாஸ்கரன்
20.மயிலம் - ஏ.சுந்தரேசன்
21.திண்டிவனம் (தனி) - கே.சந்திரலேகா
22.வானூர் (தனி) - பி.எம்.கணபதி
23.திருக்கோவிலூர் - எல்.வெங்கடேசன்
24.கள்ளக்குறிச்சி (தனி) - என்.விஜயகுமார்
25.ஏற்காடு (பழங்குடியினர் தனி) - கே.சி.குமார்
26.மேட்டூர் - எம்.ரமேஷ் அரவிந்த்
27.சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
28.நாமக்கல் - கே.செல்வி
29.குமாரபாளையம் - கே.ஆர்.சிவசுப்பிரமணியன்
30.பெருந்துறை - பி.ஆர்.குழந்தை வேலு
31.பவானி சாகர் (தனி) - ஜி.ரமேஷ்
32.கூடலூர் (தனி) - ஏ.யோகேஸ்வரன்
33.அவிநாசி (தனி) - எஸ்.மீரா
34.திருப்பூர் வடக்கு - எம்.செல்வகுமார்
35.வால்பாறை (தனி) - எம்.எஸ்.முருகராஜ்
36.ஒட்டன்சத்திரம் - பா.மாதவன்
37.நிலக்கோட்டை (தனி) - கே.ராமசாமி
38.கரூர் - ஏ.ரவி
39.கிருஷ்ணராயபுரம் (தனி) - எம்.கதிர்வேல்
40.மணப்பாறை - பி.கிருஷ்ணகோபால்
41.திருவெறும்பூர் - எஸ்.செந்தில்குமார்
42.முசிறி - கே.எஸ்.குமார்
43.பெரம்பலூர் (தனி) - கே.ராஜேந்திரன்
44.திட்டக்குடி (தனி) - ஆர்.உமாநாத்
45.விருத்தாச்சலம் - பிரேமலதா விஜயகாந்த்
46.பண்ருட்டி - பி.சிவகொழுந்து
47.கடலூர் - ஞானபண்டிதன்
48.கீழ்வேளூர் (தனி) - ஆர்.பிரபாகரன்
49.பேராவூரணி - எம்.முத்து சிவக்குமார்
50.புதுக்கோட்டை - எம்.சுப்பிரமணியன்
51.சோழவந்தான் (தனி) - எம்.ஜெயலட்சுமி
52.மதுரை மேற்கு - பி.பாலச்சந்தர்
53.அருப்புக்கோட்டை - ஆர்.ரமேஷ்
54.பரமக்குடி (தனி) - கு.சந்திர பிரகாஷ்
55.தூத்துக்குடி - யு.சந்திரன்
56.ஒட்டபிடாரம் (தனி) - எஸ்.ஆறுமுக நயினார்
57.ஆலங்குளம் - எஸ்.ராஜேந்திரநாதன்
58.ராதாபுரம் - கே.ஜெயபால்
59.குளச்சல் - எம்.சிவக்குமார்
60.விளவன்கோடு - எல்.ஐடன் சோனி

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில் மேற்கண்ட வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story