கோவை தெற்கு தொகுதியில் போட்டி: கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்


கோவை தெற்கு தொகுதியில் போட்டி: கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 14 March 2021 11:21 PM (Updated: 14 March 2021 11:21 PM)
t-max-icont-min-icon

கமல்ஹாசன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

கோவை, 

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர், இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் கார் மூலம் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகமான மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்கு வருகிறார்.

மதியம் 1.30 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், இன்று மாலை 6 மணிக்கு கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்.

Next Story