ஆர்.கே.நகர் தொகுதி அமமுக வேட்பாளராக காளிதாஸ் அறிவிப்பு


ஆர்.கே.நகர் தொகுதி அமமுக வேட்பாளராக காளிதாஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2021 6:08 AM GMT (Updated: 15 March 2021 6:45 AM GMT)

அமமுக தனது 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் காளிதாஸ் போட்டியிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக நேற்று அமமுக கூட்டணியில் இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமமுக சார்பில் ஏற்கனவே 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததால் அந்த வேட்பாளர்களில் 40-க்கும் மேற்பட்டோரை திரும்பபெற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தேமுதிக உடனான தொகுதி பங்கீட்டிற்கு பின்னர் அமமுக நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்,

ஆர்.கே.நகர் - டாக்டர் காளிதாஸ்

அரக்கோணம் - மணிகண்டன்

இராணிப்பேட்டை - வீரமணி

ஆற்காடு - ஜனார்த்தனன்

கீழ்பென்னாத்துர் - கார்த்திகேயன்

அம்பாசமுத்திரம் - ராணி ரஞ்சிதம்

நாங்குநேரி - பரமசிவ ஐயப்பன்

Next Story