கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்


கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 March 2021 12:57 PM IST (Updated: 15 March 2021 12:57 PM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது தவிர்த்து மொத்தம் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக தலைவரான முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அயனாவரம் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஊர்வலமாக சென்றார். சாலையில் திரண்ட ஏராளமான தொண்டர்கள் முக ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் முக ஸ்டாலின் இன்று திருவாரூர் சென்று அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார். 

Next Story