கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வேட்புமனு தாக்கல்


கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2021 9:46 AM GMT (Updated: 15 March 2021 9:46 AM GMT)

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன. மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ., ஓவைசி கட்சி, கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை, விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், துத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தாக்கல் செய்தார்.

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story