தமிழக மக்களின் துயரங்களை போக்குவது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் பழனிசாமி


தமிழக மக்களின் துயரங்களை போக்குவது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 16 March 2021 6:07 AM GMT (Updated: 16 March 2021 6:07 AM GMT)

தமிழக மக்களின் துயரங்களை போக்குவது அதிமுக அரசு தான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

விராலிமலை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது,

* அதிமுக அரசு கொடுக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்றும், கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றும்.

* தமிழக மக்களின் துயரங்களை போக்குவது அதிமுக அரசு தான்

* தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு 2 ஆயிரத்து 500 கொடுக்கப்பட்டுள்ளது.

* விராலிமலையில் முருகன் கோவிலுக்கு செல்ல மலைப்பாதை சாலை அமைத்துக்கொடுத்துள்ளோம்

* சிறப்பான சாலை வசதி செய்துகொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்

* ஏழைமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் இம்மாவட்டத்தில் 79 பகுதியில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்.

* ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம். அம்மா மினி கிளினிக்கிற்கு கட்டிடம் கட்ட உள்ளோம்

* வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் அதிமுக அரசு கொடுத்துள்ளது

* அதிமுக அரசாங்கம் கூட்டுறவு பயிர்கடன் ரத்து செய்தது.

* ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்றார். 

Next Story