மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 16 March 2021 5:55 PM IST (Updated: 16 March 2021 5:55 PM IST)
t-max-icont-min-icon

மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கக்கூடிய அரசு, அதிமுக அரசு என தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாகனத்தில் இருந்தவாறு பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் பழனிசாமி பிரசார நிகழ்ச்சியில் பேசியதாவது,

* மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு.

* காவிரி குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த அடிக்கல் நாட்டியுள்ளோம்.

* புயல், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாட்டிலேயே அதிக இழப்பீடு பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு.

என்றார்.

Next Story