ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுகதான் - ஸ்டாலின்


ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுகதான் - ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 March 2021 11:30 AM IST (Updated: 17 March 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் என திண்டுக்கலில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முக ஸ்டாலின் கூறினார்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜன், நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசாரத்தில் முக ஸ்டாலின் பேசியதாவது,

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான்.

திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை அப்படியே அதிமுக காப்பி அடிக்கிறது

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது.

என்றார்.

Next Story