கரூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம்


கரூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றம்
x
தினத்தந்தி 17 March 2021 12:07 PM IST (Updated: 17 March 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

கரூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். வேட்பாளராக ரவி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக தங்கராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கரூர்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இதற்கிடையில், அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இக்கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில், கரூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளராக ரவி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ரவிக்கு பதிலாக தங்கராஜ் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக தங்கராஜ் மாற்றப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Next Story