வெற்றிபெறுவது போல ஸ்டாலின் கனவு மட்டுமே காண முடியும் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
வெற்றிபெறுவது போல ஸ்டாலின் கனவு மட்டுமே காண முடியும் என தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருவிடைமருதூர்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வீரமணியை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் பேசிய அவர், ஸ்டாலினின் (திமுக தலைவர்) மந்திரம், தந்திரம் எல்லாம் இந்த தேர்தலில் பலிக்காது... வெற்றிபெறுவதுபோல
ஸ்டாலின் கனவு மட்டுமே காணமுடியும்’ என்றார்.
Related Tags :
Next Story