"மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது" - கமல்ஹாசன்
"மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது" என தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஈரோடு,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.
இத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று இரவு 7 மணிக்கு ஈரோடு திருநகர் காலனியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பேசுகையில், "மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது". மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். நாட்டுக்கான நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story