அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை


அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 17 March 2021 10:48 PM GMT (Updated: 2021-03-18T04:18:54+05:30)

அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும்படைகள், கண்காணிப்பு குழுக்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆதாரங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் 146 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் தங்கம், வெள்ளி, பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்டுள்ள பணம் மட்டும் ரூ.58.16 கோடியாகும். நாளுக்கு நாள் கைப்பற்றப்படும் பொருட்களின் மதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம், சோதனை நடவடிக்கைகள் போன்றவை பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.

Next Story