சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்


சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 18 March 2021 9:06 AM GMT (Updated: 18 March 2021 9:06 AM GMT)

சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

சென்னை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் இந்த முறையும் போட்டியிட அதிமுகவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்தது.

 எம்.எல்.ஏ சந்திரசேகரன், தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செலவ்ம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

Next Story