வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை, 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என்று தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர்.

இதன்படி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில் வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதை, வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாங்கள் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களது கட்சி உறுப்பினர்கள் உங்களை சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 





Next Story