மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு


மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 20 March 2021 11:15 AM GMT (Updated: 20 March 2021 11:15 AM GMT)

மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமாரின் வேட்பு மனு நிராகரிப்பட்டது.

கோவை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. 

234 தொகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராஜ்குமார். அவர் அரசியல் கட்சியினர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவத்தில் தனது வேட்பு மனுவை பூர்த்தி செய்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. 

மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படாததால் படிவத்தில் தவறாக பூர்த்தி செய்ததால் ராஜ்குமாரின் வேட்புமனுவை நிராகரித்து தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Next Story