"வரும் தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல்” - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
"வரும் தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல்” என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகத்தை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
* வரும் தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல்.
* திமுகவினருக்கு நல்ல எண்ணம் கிடையாது, தீய எண்ணம் படைத்தவர்கள்.
* வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது
என்றார்.
Related Tags :
Next Story