அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி


அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 21 March 2021 2:58 PM IST (Updated: 21 March 2021 2:58 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

ஆரணி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

 தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்றார்.

மேலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

Next Story