சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு


சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு
x
தினத்தந்தி 21 March 2021 2:59 PM IST (Updated: 21 March 2021 2:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் ஆயிரம் விளக்கு, துறைமுகம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவும், துறைமுகத்தில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் வினோஜ் பி.செல்வமும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் வினோஜ்.பி.செல்வம் கடந்த 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரைக் குறிப்பிடாமல் மாற்றுப்பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதை இன்று பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபித்ததை அடுத்து வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்கப்பட்டது. பெயர் பிரச்சினை காரணமாக வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பெயர் திருத்தத்திற்கு பிறகு அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது.

Next Story