பா.ஜ.க. மாநில தலைவர் போட்டியிடும் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி 30-ந் தேதி பிரசாரம்


பா.ஜ.க. மாநில தலைவர் போட்டியிடும் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி 30-ந் தேதி பிரசாரம்
x
தினத்தந்தி 23 March 2021 12:19 AM GMT (Updated: 2021-03-23T05:49:14+05:30)

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ஏற்கனவே ஒருமுறை பிரசாரம் செய்து விட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வருகிற 30-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மாநிலம் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

குமரிக்கு வருகை

பிரதமரை தொடர்ந்து மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கின்றனர். குறிப்பாக வருகிற 26-ந்தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகம் வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மதுரையிலும் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

மேற்கண்ட தகவலை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story