சைதாப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு, திருநங்கைகள் உற்சாக வரவேற்பு
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். தினசரி காலையில் சராசரியாக 5 மணி நேரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார்.
சென்னை,

சின்னமலை எல்.டி.ஜி. சாலை, ஆரோக்கிய மாதா நகர், தாமஸ் நகர், பிஷப் காலனி, கக்கன்புரம் தாலுகா அலுவலக சாலை, ஸ்ரீநகர் காலனி, ரங்கராஜபுரம், வெங்கடாபுரம், விநாயகர் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் மா.சுப்பிரமணியன் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை திருநங்கைகள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் மா.சுப்பிரமணியனுக்கு தேர்தலில் ஆதரவு தருவதாகவும் திருநங்கைகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story