மண்ணில் வேரிட்டு படர்ந்து இருக்கும் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது - துரைமுருகன் பேச்சு


மண்ணில் வேரிட்டு படர்ந்து இருக்கும் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது - துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2021 11:26 AM IST (Updated: 24 March 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

மண்ணில் வேரிட்டு படர்ந்து இருக்கும் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி,
  
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில், வாணியம்பாடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் குரலை மேற்குவங்காளத்தில் ஒலிப்பவர் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜியை எப்படியாவது வீழ்த்திவிட முடியும் என மத்திய பாஜக அரசு கருதுகிறது. ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த முடியாது. இந்த மண்ணோடு மண்ணில் வேரிட்டு படர்ந்து இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இந்த கழகத்தை யாராலும் எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது’ என்றார்.

Next Story