கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: சென்னையில் வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார்


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: சென்னையில் வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார்
x
தினத்தந்தி 25 March 2021 10:40 PM GMT (Updated: 25 March 2021 10:40 PM GMT)

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: சென்னையில் வாக்காளர்களுக்கு வழங்க 48 லட்சம் கையுறைகள் தயார் வாக்குப்பதிவு மையங்களில் கொடுக்கப்படும்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் சட்டசபை தேர்தலை பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

மேலும், முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட தபால் வாக்கு அளிக்கு முறையும் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாக்குப்பதிவு நாளன்று, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வாக்குப்பதிவு மையங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைத்தையும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு முழு உடல் கவச உடை வழங்குவது, கிருமி நாசினி வழங்குவது, முககவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வலது கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் ஓட்டு போட வரும் போது, முககவசம், கையுறைகள் அணிந்து வரவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் கையுறைகள் அணிந்து வராதவர்களுக்காக கையுறைகள் வழங்க, 48 லட்சம் கையுறைகள் கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். தேர்தல் நாளுக்கு முன்பு அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் அது அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story