"உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி
உயிரைக்கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசரத்தில் ஈடுபட்டார்.
பிரசார நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. உயிரை கொடுத்தாவது அதிமுகவை வெற்றிபெறச்செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் என்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்’ என்றார்.
Related Tags :
Next Story